மரைக்காயர் ரிலிஸில் மீண்டும் மாற்றம்… திரையரங்கில் வருமா?

சனி, 13 நவம்பர் 2021 (16:17 IST)
பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் கதாநாயகனாக மலையாளத்தில் மரைக்கார் அரவிபிக் கடலிண்டே சிம்ஹம் என்றும் தமிழில் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில் அர்ஜுன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், முகேஷ் ,நெடுமுடி வேனு, அசோக் செல்வன், பைசால் , சித்திக் . சுரேஷ் கிருஷ்ணா மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் சென்ற ஆண்டே ரிலீஸாக இருந்த நிலையில் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. அதனால் இந்த ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்ததால் மீண்டும் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகி மூன்று வாரங்களுக்கு மட்டும் 600 திரையரங்குகளில் ஓடும் என அறிவிகக்ப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் மற்ற படங்கள் எதுவும் ரிலீஸாகாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்ததை அடுத்து தயாரிப்பாளர் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் ஆகிய இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து இப்போது படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக உள்ளதாக சொல்லப்படுகிறது. வரிசையாக மோகன்லால் படங்களை வாங்கி வெளியிடும் அமேசான் ப்ரைம் நிறுவனமே இந்த படத்தையும் கைப்பற்றியதாகவும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியிட முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கி திரையரங்க உரிமையாளர்களுக்கும் தயாரிப்பாளருக்கும் சுமூகம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் மரைக்காயர் படம் திரையரங்குகளிலேயே முதலில் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்