ஏமாற்றம் அளித்த மோகன்லாலின் மரைக்காயர் படம்!

வெள்ளி, 3 டிசம்பர் 2021 (16:08 IST)
மரைக்காயர் படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ளது.

பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் கதாநாயகனாக மலையாளத்தில் மரைக்கார் அரவிபிக் கடலிண்டே சிம்ஹம் என்றும் தமிழில் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில் அர்ஜுன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், முகேஷ் ,நெடுமுடி வேனு, அசோக் செல்வன், பைசால் , சித்திக் . சுரேஷ் கிருஷ்ணா மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர். இந்த திரைப்படம் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் டிசம்பர் 2 ஆம் தேதி ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் ரிலிஸ் ஆனது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்களை ஏமாற்றியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேக்கிங்கில் அசத்தி இருந்தாலும், திரைக்கதை மிகவும் சோர்வாக இருப்பதாகவும் குறைகளைப் பகிர்ந்து வருகின்றனர் ரசிகர்கள்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்