''பகாசூரன்'' பட 2 வது சிங்கில் #Kaathama பாடலில் மன்சூர் அலிகான் டான்ஸ்!

செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (17:54 IST)
''பகாசூரன்'' படத்தின் அடுத்த அப்டேட்டை இயக்குனர் மோகன் ஜி வெளியிட்டுள்ளார்.

தமிழ்சினிமாவில் பிரபல இயக்குனர்  மோகன் ஜி சத்ரியன். இவர் பழைய வண்ணாரப்பேட்டை,  திரவுபதி, ருத்ர தாண்டவம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இதில்,  திரவுபதி படம்  நடிகர் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் ரிஷி – சவுந்தர்யா  நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகி வசூல் குவித்தது. இதனால், இவரது அடுத்தடுத்த படங்கள் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்த நிலையில்,   மோகன் ஜி இயக்கத்தில் உருவாகிவரும் பகாசூரன் படத்தில் இடம்பெற்ற #SivaSivayam முதல் சிங்கிலை அவரது முதல் பட ஹீரோ ரிச்சர்ட் ரிஷி  21 ஆம் தேதி வெளியிட்டார்.

இந்த நிலையில், பகாசூரன் திரைப்படத்தின் இடம்பெற்றுள்ள 2 ஆம் பாடல் #Kaathama   பாடல் விரைவில் ரிலீஸாகவுள்ளதாகவும், இப்பாடலின் ஒத்திகையில் நடிகர் மன்சூர் அலிகான் ஈடுபடும் வீடியோவை  இயக்குனர் மோகன் ஜி தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், இது வைரலாகி வருகிற்து.

#பகாசூரன் திரைப்படத்தின் #Kaathama என்ற பாடலின் ஒத்திகையின் போது திரு மன்சூர்அலிகான் அவர்கள்.. அடுத்ததாக இந்த பாடல் விரைவில் வெளியாகும்.. pic.twitter.com/ixERdSHazJ

— Mohan G Kshatriyan (@mohandreamer) September 27, 2022

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்