லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு..! – அஜித்துடனான பைக் ரைட் குறித்து மஞ்சு வாரியர்!

சனி, 3 செப்டம்பர் 2022 (12:06 IST)
நடிகர் அஜித்குமாருடன் முதன்முறையாக பைக் ரைட் சென்றது குறித்து நடிகை மஞ்சு வாரியர் தனது அனுபவங்களை கூறியுள்ளார்.

பிரபல தமிழ் நடிகரான அஜித்குமார் படம் நடிப்பதோடு மட்டுமல்லாமல், பைக்கில் லாங் ரைடு செல்வது போன்றவற்றை தனது பொழுதுபோக்காக வைத்துள்ளார்.

வலிமை படத்திற்கு பிறகு தற்போது அஜித் மீண்டும் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் தனது 67வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையே லடாக் லாங் பைக் ரைடு சென்ற அஜித்குமாருடன், நடிகை மஞ்சு வாரியரும் பைக் ஓட்டி சென்றுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த பயண அனுபவம் குறித்து பேசியுள்ள நடிகை மஞ்சு வாரியர் “எங்கள் சூப்பர் ஸ்டார் ரைடர் அஜித் குமார் சாருக்கு மனமார்ந்த நன்றிகள்! எனது முதல் இரு சக்கர வாகனப் பயணத்திற்காக அட்வென்ச்சர் ரைடர்ஸ் இந்தியாவில் இணைவதில் பெருமை அடைகிறேன்! என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி அஜித் சார். சுப்ரஜ் மற்றும் சர்தார் சர்பாஸ் கானுக்கும் இணைந்ததற்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்