பன்முகக் கலைஞர் மணிவண்ணன் நினைவுதினம் இன்று

புதன், 15 ஜூன் 2022 (09:26 IST)
தமிழ் சினிமாவின் மூத்தக் கலைஞர்களில் ஒருவராக மதிக்கப்படும் மணிவண்ணனின் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான பல படங்களை இயக்கிய மணிவண்ணன், மிகசிறந்த நடிகராகவும் இருந்துள்ளார். ஆரம்பத்தில் கல்லூரி நாட்களில் பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தை பார்த்த மணிவண்ணன் அதுகுறித்து பாரதிராஜாவுக்கு கடிதமே எழுதியுள்ளார். பின்னாட்களில் பாரதிராஜாவின் படங்களான நிழல்கள், டிக் டிக் டிக் போன்ற படங்களில் பணியாற்றிய மணிவண்ணன் பாரதிராஜாவின் படங்களிலேயே நடித்தும் உள்ளார். மிகப்பெரிய வெற்றிபெற்ற அலைகள் ஓய்வதில்லை படத்துக்குக் கதை எழுதியதும் மணிவண்ணன்தான்.

பின்னர் இயக்குனராக நூறாவது நாள், அமைதிப்படை போன்ற தமிழ் சினிமாவின் முத்திரை பதித்த படங்களை இயக்கிய மணிவண்ணன் 90களுக்கு பிறகு அதிகமான படத்தில் நடித்துள்ளார். ஈழ ஆதரவு, தமிழ் தேசிய ஆதரவாளரான மணிவண்ணன் தொடர்ந்து அவரது படங்களில் தமிழ் அரசியல், பகுத்தறிவு, கடவுள் மறுப்பு போன்றவற்றையும் நகைச்சுவையாக வெளிப்படுத்தியுள்ளார். அவர் மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆன பின்பும் அவரது அரசியல் பகடி ஜோக்குகள் இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வருவதே அவரது கலை இருப்பின் சாட்சியாக நீடிக்கிறது.

கடைசியாக நாகராஜ சோழன் படத்தை இயக்கிய மணிவண்ணன் கடந்த 2013 ஜூன் 15 ஆம் தேதி மறைந்தார். அவரின் 9 நினைவிதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்