இங்கிலாந்து பிரதமரை சந்தித்த நடிகை மனிஷா கொய்ராலா.. எவரெஸ்ட் வருமாறு அழைப்பு..!

Siva

புதன், 22 மே 2024 (17:54 IST)
இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இருக்கும் நிலையில் அவரை நேபாள நாட்டில் பிறந்து வளர்ந்து பாலிவுட்டிலும் கோலிவுட்டிலும் பிரபலமான நடிகை மனிஷா கொய்ராலா சந்தித்துள்ளார். 
 
இந்த சந்திப்பின்போது தங்கள் நாட்டில் உள்ள எவரெஸ்ட் சிகரத்திற்கு வருமாறு இங்கிலாந்து பிரதமருக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளதாகவும் அந்த அழைப்பை அவர் ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. 
 
இங்கிலாந்து பிரதமரை சந்தித்த தருணம் தனக்கு மிகவும் மகிழ்ச்சியானது என்றும் அதிலும் தான் சமீபத்தில் நடித்த ’ஹீராமண்டி’ என்ற வெப்தொடரை அவர் பார்த்து மகிழ்ந்ததாக கூறியது தனக்கு இரட்டிற்கு மகிழ்ச்சி என்றும் மனிஷா கொய்ராலா தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். 
 
இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் மனிஷா கொய்ராலா பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
நடிகை மனிஷா கொய்ராலா கமல்ஹாசன் நடித்த இந்தியன், ஆளவந்தான் ரஜினிகாந்த் நடித்த பாபா, ஷங்கர் இயக்கிய முதல்வன், மணிரத்னம் இயக்கிய பம்பாய், தனுஷ் நடித்த மாப்பிள்ளை உள்பட ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்