ஐரோப்பாவில் பிரபல செல்போன் விற்பனை நிறுவனமாக இருந்த லைகா கத்தி படத்தின் தமிழ் சினிமாவில் கால்பதித்தது லைகா நிறுவனம். இலங்கையைச் சேர்ந்த லைகா நிறுவனம் இன்று பிரம்மாண்ட படங்கள் தயாரிக்கும் வெகுசில நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்கள் மற்றும் முன்னணி இயக்குனர்கள் என அனைவரையும் வைத்து படம் தயாரித்துள்ளது.
இந்நிலையில் அதன் நிறுவனர் சுபாஷ்கரனுக்கு டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டிருப்பது தொடர்பான பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் “சுபாஷ்கரன் வாழ்க்கையையே சுவாரசியங்களும், விடாமுயற்சியும் நிறைந்தது. தனி ஆளாகக் கிளம்பிவந்து இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை வளர்த்திருக்கிறார் அவரது வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கலாம்” என்று கூறினார். அதன் பின் பேசிய இயக்குனர் மணிரத்னமும் அதேக் கருத்தை வழிமொழுந்தார்.