கார்த்தி, அதிதி ராவ் நடித்துவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊட்டி, சென்னை, காஷ்மீர், லடாக் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. பாடல் காட்சியை அவர் இமாச்சல பிரதேசத்தில் எடுப்பதாகத்தான் இருந்தது. சில பிரச்சனைகள் காரணமாக அது முடியாமல் போக, தற்போது ஐரோப்பாவில் உள்ள பனி மலைசிகரங்களின் அடிவாரத்தில் எடுப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.