“மணிரத்னம் மோசமான கதைசொல்லி” – இயக்குநர் சத்யா

சனி, 16 செப்டம்பர் 2017 (12:41 IST)
மணிரத்னத்துக்கு கதையை சரியாக விவரிக்கத் தெரியாது’ என இயக்குநர் சத்யா தெரிவித்துள்ளார்.
 



சத்யா இயக்கத்தில் ஈஷா குப்தா, சச்சின் ஜோஷி நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘யார் இவன்’. இந்தப் படத்தை இயக்கியுள்ள சத்யா, மணிரத்னத்தின் சாயல் 10 சதவீதமாவது இந்தப் படத்தில் இருக்கும் என்கிறார். “சின்ன வயதில் இருந்து, எனக்கு கிடைக்கும் காசை வைத்து மணி சார் படங்களை மட்டும்தான் பார்ப்பேன். ‘ஓ காதல் கண்மணி’ வரைக்கும் அது தொடர்ந்தது. இப்போதும் அவர் படங்களைப் பார்த்து கற்றுக் கொள்கிறேன்” என்றார்.

இடைபுகுந்த சச்சின் ஜோஷி, சத்யாவுக்கு கதையை விவரித்துச் சொல்லத் தெரியாது என்றார். அதற்குப் பதிலளித்த சத்யா, “மணி சாரும் மோசமான கதைசொல்லி. அவருக்கும் சரியாக கதையை விவரித்து சொல்லத் தெரியாது. ஆனால், இன்று மிகப்பெரிய இயக்குநர் அவர்” என்றார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்