மணிரத்னம் படத்தில் இன்னொரு பிரபல நடிகை

வெள்ளி, 8 செப்டம்பர் 2017 (23:57 IST)
மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் ஒரு நட்சத்திர கூட்டமே இருக்கும் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. இந்த படத்தில் ஏற்கனவே விஜய்சேதுபதி, துல்கர் சல்மான், ஜோதிகா, சாரா அலிகான் ஆகியோர் நடிக்கவுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல நடிகை இணைந்துள்ளார்.



 
 
அவர்தான் தர்மதுரை, காக்கா முட்டை, ஆறாது சினம் போன்ற படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த படத்தில் ஐஸ்வர்யாவுக்கு மிக முக்கிய கேரக்டர் என்றும் இந்த கேரக்டர் அவரது திரையுலக வாழ்க்கையின் திருப்புமுனையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
ஏற்கனவே வெற்றிமாறனின் 'வடசென்னை', விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' ஆகிய இரண்டு பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது மீண்டும் ஒரு முக்கிய படங்களில் நடிப்பதால் அவர் முன்னணி இடத்தை நோக்கி முன்னேறுகிறார் என்பது உறுதியாகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்