சர்க்கரைப் பொங்கலும், வடைகறியும் போல சம்பந்தமில்லாமல் இணைந்திருக்கிறது மணிரத்னம் – சிம்பு கூட்டணி. ஆனால், அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் என இன்னும் 3 ஹீரோக்கள் இருப்பதால், சிம்புவின் தொல்லை பெரிதாகத் தெரியாது என நிம்மதிப் பெருமூச்சு விடலாம்.
ஆனால், இந்தக் கூட்டணி சேர்ந்தது எப்படி? சிம்புவின் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தவர், தெலுங்கு நடிகரான நானி. ஆனால், இன்னும் 3 ஹீரோக்கள் இருப்பதால் தனக்கு பெரிய கேரக்டர் இருக்காது என நினைத்து மறுத்துவிட்டாராம். எனவே, இளம்பெண்களின் இதயம் கவர்ந்த(?!) சிம்புவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்கிறார்கள்.