பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பாரதிராஜாவுக்கு திரையிட்ட இயக்குனர் மணிரத்னம்!

சனி, 15 அக்டோபர் 2022 (09:40 IST)
இயக்குனர் பாரதிராஜா சமீபகாலமாக உடல்நலக் குறைவு காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இயக்குநர் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதன் பின்னர் வீடு திரும்பிய அவர் தற்போது வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மணிரத்னம் அவருக்காக தனியாக இப்போது திரையிட்டு காட்டியுள்ளாராம். பாரதிராஜா, இயக்குனர் மணிரத்னம் மீது அளவற்ற பாசம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்