லோகா யூனிவர்ஸில் இணைய மம்மூட்டி போட்ட கண்டீஷன்… துல்கர் சல்மான் பகிர்ந்த தகவல்!

vinoth

வெள்ளி, 19 செப்டம்பர் 2025 (10:28 IST)
துல்கர் சல்மான் தயாரிப்பில் டாம்னிக் அருண் இயக்கத்தில் உருவான  ‘லோகா’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த ஹாலிவுட்டில் வெளியாகும் vampire வகை சூப்பர் வுமன் வகைத் திரைப்படமாக உருவாகியுள்ளது.

முதலில் குறைவான திரைகளில் வெளியான இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று அதன் பின்னர் திரைகள் அதிகரிக்கப்பட்டு கேரளா தாண்டி பேன் இந்தியா அளவில் வெற்றிகரமாக ஓடி 250 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளியாகி ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் இன்னும் கணிசமான திரையரங்குகளில் படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகவுள்ளன. அதில் ஒரு பாகத்தில் ‘மூத்தோன்’ எனும் கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடிக்கவுள்ளார். இது பற்றி பேசியுள்ள தயாரிப்பாளர் துல்கர் சல்மான் “லோகா முதல் பாகத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுத்தபோது அப்பா தயங்கினார். ஆனால் படம் வெற்றி பெற்றதும் மகிழ்ச்சியடைந்தார். முதல் பாகம் வெற்றிபெற்றாலும் இரண்டாவது பாகமும் வெற்றி பெற்றால்தான் மூன்றாவது பாகத்தில் ‘மூத்தோன்’ கதாபாத்திரத்தில் நடிப்பேன் என நிபந்தனை விதித்துள்ளார்” எனக் கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்