கமல்ஹாசனின் ’’எவனென்று நினைத்தாய்’’ பட புது அப்டேட்... குஷியான ரசிகர்கள்
வியாழன், 5 நவம்பர் 2020 (17:22 IST)
நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிஸியாக உள்ள நிலையில் அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் மாஸ்டர் படத்தை முடித்துவிட்டு ரிலீஸுக்கு தயாராகவுள்ள லோகேஷ் கனகரா இயக்கத்தில் எவனென்று நினைத்தாய் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
இந்நிலையில் ரசிகர்கள் இப்படத்தின் முக்கிய அப்டேட் குறித்த வெறித்தனமாக வெயில் பண்ணிக்கொண்டிருக்கும் நிலையில் இன்னும் இரண்டுநாட்கள் கழித்து அதாவது அக்டோபர் 7 ஆம் தேதி மாலை 5 மணிக்கு இப்படத்தின் டீசர் வெளிவரும் என்ற முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கமல்ஹாசனின் 232 வது படமாக உருவாகிவரும் இப்படத்தில் அடுத்தாண்டு சம்மருக்கு அனிருத்தின் இசை வெளியாகி மகிழ்விக்கும் எனவும் அந்தப் போஸ்டரில் தகவல் வெளியாகியுள்ளது.