ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்த மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக்!

வெள்ளி, 31 மார்ச் 2017 (11:51 IST)
மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக் தனது மனைவியுடன் 5 நாள் பயணமாக இந்தியா வரும் அவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்திக்க விரும்பம் தெரிவித்தையடுத்து நேற்று சென்னை வந்தார்.  அவரை வரவேற்று சென்னையில் பல இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

 
தங்கள் சென்னைப் பயணத்தின்போது ரஜினியைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து ரஜினி வீட்டில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று காலை 10:30 மணியளவில் ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு நஜிப் ரசாக்கும் அவர்  மனைவியும் வந்தனர். அவர்களை ரஜினிகாந்த் வரவேற்றார். ரஜினியின் படங்கள், அவருக்கு தாங்கள் எந்த அளவுக்கு ரசிகர்கள் என்பதையெல்லாம் ரஜினியிடம் கூறினர் மலேசிய பிரதமரும் அவர் மனைவியும். ரஜினியை மலேசியாவின் சுற்றுலா தூதராக  வரும்படி இந்த சந்திப்பில் அழைப்பு விடுத்தனர். இதுகுறித்த எந்த முடிவையும் ரஜினிகாந்த் தெரிவிக்கவில்லை. இந்த சந்திப்பு  சுமார் 1 மணி நேரம் நீடித்தது.

 
இதுகுறித்து ரஜினி செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக்கை சந்தித்ததில் மகிழ்ச்சி எனவும்,   மலேசியாவில் உள்ள தமிழர்களுக்கு நல்லதை செய்து வருகின்றனர். மேலும் செய்ய கேட்டுகொள்வதாகவும் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்