அதே நேரத்தில், லட்சக்கணக்கானோர் சென்னைக்கு சாரைசாரையாக வந்து முதல்வருக்கு அஞ்சலில் செலுத்தினர். மக்கள் மனதில் ஆழ்ந்த சோகம் ஒருபக்கம், மிகவும் உணர்ச்சிவசப்பட்ட மனநிலையும் நிலவியது. இருப்பினும் ஒரு சிறு அசம்பாவிதங்கள் கூட நிகழாமல், முதல்வருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.