ராஜமெளலிக்காக அடித்துக் கொள்ளும் ஹீரோக்கள்

புதன், 12 ஜூலை 2017 (18:21 IST)
ராஜமெளலியின் அடுத்த படத்தில் யார் நடிப்பது என தெலுங்கு நடிகர்களுக்குள் அடிதடியே நடக்கிறதாம்.


 
 
‘பாகுபலி’ என்ற ஒற்றைப் படத்தின் மூலம் பலரையும் வசியம் செய்துவிட்டார் எஸ்.எஸ்.ராஜமெளலி. அவருடைய அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்க, ஏகப்பட்ட நடிகர்கள் போட்டி போடுகின்றனர். நடிகர்களைவிட, அவர்கள் ரசிகர்களின் போட்டிதான் பலமாக இருக்கிறது. குறிப்பாக, ஜூனியர் என்.டி.ஆர். ரசிகர்களும், மகேஷ் பாபு ரசிகர்களும், ‘அடுத்து எங்கள் ஹீரோதான் ராஜமெளலி படத்தில் நடிக்கப் போகிறார்’ என சமூக வலைதளங்களில் சண்டையிட்டு வருகின்றனர்.
 
இன்னொரு பக்கம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் மூன்று மொழிகளிலும் ‘பாகுபலி’ சூப்பர் ஹிட் என்பதால், அடுத்த படத்தை மூன்று மொழிகளிலும் ராஜமெளலி எடுக்கப் போகிறார் என்கிறார்கள். அப்படியானால், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழி ஹீரோக்களையும் வைத்து அடுத்த படத்தை எடுப்பார் என்று இவர்களாகப் பேசிக் கொள்கிறார்கள். ஆனால், தன்னுடைய அடுத்த படம் குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் அமைதி காக்கிறார் ராஜமெளலி.
 

வெப்துனியாவைப் படிக்கவும்