சிம்புவின் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் மகத், ஹீரோவாக இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அறிமுக இயக்குனர் பிரபுராம் இயக்கவுள்ள படம் ஒன்றில் மகத்- ஐஸ்வர்யா ஜோடியாக நடிக்கவுள்ளனர். இந்த படம் ஒரு ரொமான்ஸ் காமெடி படம் ஆகும். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் தொடங்கவுள்ளது.