மகளிர் மட்டும் - கமல் படப்பெயரில் ஜோதிகா

வியாழன், 13 அக்டோபர் 2016 (10:16 IST)
ஜோதிகா நடிக்கும் புதிய படத்துக்கு மகளிர் மட்டும் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 36 வயதினிலே படத்தில் நடித்த ஜோதிகா, அடுத்து குற்றம் கடிதல் பிரம்மா இயக்கத்தில் நடித்து வருகிறார்.
 

 

பானுப்ரியா, சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி ஆகியோரும் முக்கியமான வேடத்தில் நடிக்கின்றனர். சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்டும், கிறிஸ்டி பிக்சர்ஸும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு மகளிர் மட்டும் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
 
‘மகளிர் மட்டும்’ என்ற டைட்டிலுடன் கூடிய இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை செவ்வாய் கிழமை மாலை வெளியிட்டார்கள். ’36 வயதினிலே’ படத்தில் பெரும்பாலும் புடவையில் தோன்றி நடித்த ஜோதிகா, இப்படத்தில் மாடர்ன் கேரக்டரில் நடிப்பது மாதிரி அமைந்திருக்கிறது. பிரம்மா இயக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார்.
 
கமலின் ராஜ்கமல் தயாரித்த படத்தின் பெயர் என்பதால், முறைப்படி அவரிடம் அனுமதி வாங்கி மகளிர் மட்டும் என பெயர் வைத்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்