திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் மாதவன்: ‘ராக்கெட்டரி’ வெற்றிக்கு பிரார்த்தனை

வெள்ளி, 17 ஜூன் 2022 (14:13 IST)
பிரபல நடிகர் மாதவன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று தரிசனம் செய்தார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 
 
பிரபல நடிகர் மாதவன் ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்த பின் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மேலும் தரிசனத்திற்குப் பின்னர் வெளியே வந்த அவர் கையில் ‘ராக்கெட்டரி’  படத்தின் போஸ்டர் இருந்தது.
 
இந்த நிலையில் அவர் ‘ராக்கெட்டரி’ படத்தின் வெற்றிக்காக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பிரார்த்தனை செய்ய வந்திருப்பதாக தெரிகிறது
 
மாதவன் நடித்து இயக்கிய ‘ராக்கெட்டரி’  திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படம் வரும் ஜூலை மாதம் 1ஆம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நம்பி நாராயணன் என்ற விஞ்ஞானியின் முன் வாழ்க்கைக் கதைதான் இந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்