இந்து மதம் ஏன் வளரவில்லை: திருமாவளவன் கேள்விக்கு நாராயணன் திருப்பதி பதிலடி

திங்கள், 13 ஜூன் 2022 (18:33 IST)
இந்து மதம் ஏன் வளரவில்லை என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கேள்விக்கு பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
 
இஸ்லாம் வளர்ந்தது போல், கிருஸ்துவம் வளர்ந்தது போல் உலகம் முழுதும் ஹிந்து மதம் ஏன் வளரவில்லை? என கேள்வி கேட்ட திருமாவளவனுக்கு இதுதான் பதில்
 
ஹிந்து என்பது ஒரு மதமே இல்லை. வாழும் முறை. மேலும், இந்த வாழும் முறை யாரையும் கட்டாயப்படுத்தியோ, பணம் கொடுத்தோ, ஆசை காட்டியோ, ஏமாற்றியோ, மதமாற்றம் செய்வதில்லை.அனைவரும் சமம் என்று நினைப்பதே சனாதன தர்மம் என்கிற ஹிந்து மதம். கட்டாயப்படுத்தி, ஆசை காட்டி மதம் மாற்றுபவர்களும், பணத்திற்காக விலைபோகிறவர்களுமே மதவாதிகள். அந்த மதவாதிகளுக்கு துணை செல்பவர்கள் மத வெறியர்கள். திருமாவளவனுக்கு புரிய வேண்டும்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்