கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதற்கு பல நடிகைகளுக்கு முன் உதாரணமாக இருந்தவர் அனுஷ்கா. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான பாகுபலி, பாகமதி ஆகிய படங்கள் அனுஷ்காவிற்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகும் தில்லர் படமான சைலன்ட் என தலைப்பிட்டுள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். வசனங்களே இல்லாத பேசும் படமாக இது உருவாகிறது.