மாநாடு ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்…. இணையத்தில் வெளியானது!

செவ்வாய், 18 மே 2021 (08:31 IST)
மாநாடு படத்தில் சிம்பு மற்றும் கதாநாயகி இருக்கும் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மற்ற கதாபாத்திரங்களில் எஸ் ஏ சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். நீண்ட காலமாக படப்பிடிப்பில் இருந்த இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன.

இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிவடைந்துவிட்டன. இந்நிலையில் இப்போது கொரோனா லாக்டவுன் முடிந்ததும் கடைசி கட்ட படப்பிடிப்பு முடிய உள்ளது, இதையடுத்து மாநாடு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சிம்பு மற்றும் கதாநாயகி கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்