சிவா மனசுல சக்தி, பாஸ், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய ஹிட் படங்களின் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட இயக்குனர் எம் ராஜேஷ். ஆனால் ஒரு கட்டத்தில் அவரின் பார்முலா படங்கள் ரசிகர்களுக்கு போரடிக்க ஆரம்பித்ததால் வரவேற்புப் பெறவில்லை.
ஆனாலும் ராஜேஷ் இன்னும் பார்முலாவை மாற்றவில்லை. இந்நிலையில் இப்போது அவர் நடிகை ஹன்சிகாவை கதாநாயகி ஆக்கி, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்துக்காக ஒரு வெப் சீரிஸை இயக்கினார். ஆனால் அந்த தொடரும் வெற்றி பெறவில்லை.