பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனின்போது கமல்ஹாசனுக்கு நெருக்கமான சினிமா பாடலாசிரியர் சினேகன், அதன்பின்னர் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்தவுடன் அவரது கட்சியில் இணைந்து நிர்வாகியாகவும் மாறினார். இந்த நிலையில் தற்போது அவருக்கு கமல்ஹாசன் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் பதவியை வழங்கியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் சவேரியாபுரம் மற்றும் திருமயத்துக்கு இடையே சினேகன் சென்ற கார் மோதி மோட்டார் சைக்கிளில் வந்த அருண் பாண்டி என்ற இளைஞர் மேல் மோதியதால் அவர் கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் திருச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். திருமயம் போலீஸார், 2 பிரிவுகளின் கீழ் சினேகன் மீது நேற்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.