தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் பாடலாசிரியராக இருப்பவர் விவேக். ரஹ்மான், சந்தோஷ் நாராயணன் மற்றும் அனிருத் ஆகியோர்களின் இசையில் தொடர்ச்சியாக பாடல்களை எழுதி வருகிறார். இப்போது அவர் திரைக்கதை எழுத்தாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் படத்தை கார்த்திக் நரேன் இயக்க உள்ளார். இந்த படத்துக்காகதான் இப்போது கூடுதல் திரைக்கதையை எழுத ஒப்பந்தமாகியுள்ளார் விவேக். இதை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.