விஜய் படம் தேறாது! லைகாவை அடுத்து சன்'னும் ஒதுங்குகிறதா?

திங்கள், 22 மே 2017 (05:02 IST)
இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'தளபதி 61' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் அவருடைய அடுத்த படமான 'தளபதி 62' படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனால் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் குறித்த தகவல்கள் குழப்பத்தை தருகின்றது.



 


முதலில் இந்த படத்தை 'கத்தி' படத்தை தயாரித்த 'லைகா நிறுவனம்' தயாரிக்க ஒப்புக்கொண்டது. ஆனால் 'பைரவா' படத்தின் தோல்வி அந்நிறுவனத்தை யோசிக்க வைத்துவிட்டதாகவும், விஜய்-முருகதாஸ் இணைந்தால் பட்ஜெட் அதிகமாகும் என்றும், அந்த பட்ஜெட்டுக்கு ஏற்ற வருமானம் வர வாய்ப்பில்லை என்றும் முடிவு செய்த இந்நிறுவனம் பின்வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் 'எந்திரன்' படத்திற்கு பின்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்த போதிலும் இதுகுறித்து முறையான அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. விஜய் மாஸ் நடிகர் என்பதில் சந்தேகம் இல்லை என்றாலும் விஜய், முருகதாஸ் ஆகிய இருவருக்கும் மிகப்பெரிய சம்பளத்தொகை கொடுக்க வேண்டியதிருப்பதால் போட்ட முதலீடு மட்டுமே திரும்ப கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், அதனால் சன் நிறுவனமும் தயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இவை அனைத்தும் வதந்தி என்றும், 'துப்பாக்கி', 'கத்தி' ஆகிய இரண்டு வெற்றிகளை கொடுத்த இந்த கூட்டணி நிச்சயம் மூன்றாவது வெற்றியை கொடுக்கும் என்றும், விஜய் படத்தை தயாரிக்க பல நிறுவனங்கள் போட்டியில் உள்ளதாகவும் ரசிகர்கள் தரப்பில் கூறி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்