நல்ல கதைகளை எங்களுக்கு அனுப்புங்கள்… இளம் இயக்குனர்களுக்கு லைகா அறிவிப்பு!

செவ்வாய், 15 ஜூன் 2021 (14:00 IST)
லைகா நிறுவனம் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு வழங்கும் விதமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

லைகா நிறுவனம் தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் என பிரம்மாண்டமாக கால்பதித்தது. ஆனால் எந்திரன் 2, இந்தியன் 2 என மிக பெரிய அளவில் இப்போது நஷ்டத்தில் உள்ளது. அதனால் மீண்டும் சிறுபட்ஜெட் படங்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது.

அதன் ஒரு கட்டமாக இளம் இயக்குனர்கள் தங்களிடம் இருக்கும் கதைச் சுருக்கத்தை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப சொல்லி கேட்டுள்ளது. அனுப்பப்படும் கதைகளில் சிறந்த கதையை அனுப்பியவருக்கு இயக்குனர் வாய்ப்பு அளிக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்