இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் ஒளிப்பதிவாளர் மோதலா? எல் ஐ சி பட அப்டேட்

vinoth

வெள்ளி, 3 மே 2024 (07:09 IST)
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் டுடே புகழ் ப்ரதீப் ரங்கநாதன் எல் ஐ சி என்ற படத்தில் நடித்து வருகிறார். லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிக்கிறார் இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோவை ஈஷா மையத்தில் தொடங்கி நடைபெற்றது. இந்த ஷூட்டிங்கை ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் தொடங்கினார் விக்னேஷ் சிவன். இந்த படத்தில் கதாநாயகியாக க்ரீத்தி ஷெட்டி நடிக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

முதலில் ப்ரதீப் சம்மந்தமான காட்சிகளை படமாக்கிய விக்னேஷ் சிவன் அதன் பின்னர் எஸ் ஜே சூர்யா நடித்த காட்சிகளைப் படமாக்கினார். இப்போது தமிழகத்தில் எடுக்க வேண்டிய காட்சிகளை எடுத்து முடித்துள்ள விக்னேஷ் சிவன் அடுத்து சிங்கப்பூர் சென்று சில முக்கியக் காட்சிகளை படமாக்கி வந்தார்.

இப்போது படத்துக்கு ஒரு பிரேக் விடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் படத்தின் ஒளிப்பதிவாளர் ரவி வர்மனுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையிலான கருத்து வேறுபாடும் ஷூட்டிங் நிறுத்திவைக்கப்பட ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்