இந்தியில் ரீமேக் ஆகும் லவ் டுடே… இயக்குனர் இவரா?

செவ்வாய், 15 நவம்பர் 2022 (15:57 IST)
கோமாளி படத்தின் இயக்குனர் பிரதீப் இயக்கி அவரே கதாநாயகனாக நடித்துள்ள லவ் டுடே திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. முதல் நாள் முதல் காட்சியில் இருந்தே படத்துக்கு அபரிமிதமான வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தின் பட்ஜெட்டை விட 4 மடங்கு லாபம் ஈட்டும் என்றும் சொல்லப்படுகிறது. இதுபோல ஓடிடி, சேட்டிலைட் மற்றும் ரீமேக் உரிமைகள் மூலமாக கூடுதலாக லாபம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் 8 நாட்களில் இந்த படம் சுமார் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல நடிகர்கள் இல்லாமல் புதுமுகங்கள் நடித்த படத்துக்கு இவ்வளவு பெரிய தொகையை வசூலித்துள்ளது ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது. 

இதையடுத்து இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ள நிலையில், அதையும் இயக்க பிரதீப்பையே தயாரிப்பு நிறுவனம் அனுகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்