50 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த லவ் டுடே திரைப்படம்…!

ஞாயிறு, 13 நவம்பர் 2022 (15:40 IST)
கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் கோமாளி. ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் அதிகம் வசூல் செய்த படமாக அமைந்தது. அந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்  இயக்கி இருந்தார். கோமாளி வெற்றியை அடுத்து இப்போது அவரே கதாநாயகனாகி இயக்கியுள்ள லவ் டுடே திரைப்படம் கடந்த வாரம் வெளியானது.

முதல் நாள் முதல் காட்சியில் இருந்தே படத்துக்கு அபரிமிதமான வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தின் பட்ஜெட்டை விட 4 மடங்கு லாபம் ஈட்டும் என்றும் சொல்லப்படுகிறது. இதுபோல ஓடிடி, சேட்டிலைட் மற்றும் ரீமேக் உரிமைகள் மூலமாக கூடுதலாக லாபம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் 8 நாட்களில் இந்த படம் சுமார் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல நடிகர்கள் இல்லாமல் புதுமுகங்கள் நடித்த படத்துக்கு இவ்வளவு பெரிய தொகையை வசூலித்துள்ளது ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்