இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக இருந்த விஜய் நடித்த லியோ படம் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகி, நல்ல வசூலை ஈட்டியது. ஆனால் விமர்சன ரீதியாக பல எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது. குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதியில் இடம்பெற்ற பிளாஷ்பேக் காட்சிகள் ரசிகர்களால் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டன.
இந்த படம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து LCU வில் வருமா வராதா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. சில வாய்ஸ் ஓவர்களையும், ஒரு சின்ன கதாபாத்திரத்தையும் விக்ரம் மற்றும் கைதி படத்தில் இருந்து லியோ படத்தில் இறக்கிவிட்டு இதுதான் LCU என ரசிகர்களை செமையாக ஏமாற்றிவிட்டார் லோகேஷ் என அங்கலாய்க்கப்பட்டது.
ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் LCU என்பது ஒரு பிராண்ட் ஆகிவிட்ட நிலையில் அதை வைத்து ஒரு டாக்குமெண்டரியை உருவாக்கியுள்ளனர் லோகேஷ் குழுவினர். இதில் நரேன், லோகேஷ், அனிருத் ஆகியோர் இடம்பெற்று பேசியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த டாக்குமெண்டரியை நெட்பிளிக்ஸில் 3 கோடி ரூபாய்க்கு விற்று கல்லா கட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட 45 நிமிடம் வரை ஓடும் இந்த டாக்குமெண்டரி விரைவில் ரிலீஸ் ஆகும் என சொலல்ப்படுகிறது.