பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறார் கமல்.. 5 பேரை குறி வைத்த விஜய் டிவி..!
புதன், 13 டிசம்பர் 2023 (13:53 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல்ஹாசன் வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து விஜய் டிவி நிர்வாகம் 5 பிரபல நடிகர்களுக்கு குறி வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் ஏழாவது சீசனில் மிகப்பெரிய கெட்ட பெயரை பெற்றுவிட்டார். பிரதீப்பை வெளியேற்றியது முழுக்க முழுக்க தவறு என்றும் அது மட்டும் இன்றி மாயா மற்றும் பூர்ணிமாவுக்கு ஆதரவாகவே அவர் செயல்படுவதாகவும் விமர்சனம் செய்யப்பட்டது.
இதனால் இதுநாள் வரை சேர்த்து வைத்திருந்த நல்ல பெயர் கெட்டுவிட்டதை அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற கமல்ஹாசன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து பிக் பாஸ் ஓட்டிங் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சிம்பு உள்பட ஐந்து பிரபலங்களிடம் விஜய் டிவி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சிம்புவை தவிர விஜய்சேதுபதி, அர்ஜுன், சரத்குமார் மற்றும் மாதவன் ஆகியோர் இந்த பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது