இந்த படத்தைப் பற்றிய மேலும் சில சுவாரஸ்யமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான லிங்குசாமி கடுமையான பொருளாதார சுமையில் சிக்கியுள்ள நிலையில் அவருக்கு உதவும் விதமாக லாரன்ஸ் இந்த படத்தை அவர் தயாரிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம். அதுபோல தொடர்ந்து 2 தோல்விப் படங்களைக் கொடுத்த இயக்குனர் ரத்னகுமாருக்காக இந்த படத்தின் கதையை லோகேஷ் கனகராஜ் எழுத உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.