“விஜய் படத்தின் வேலையை தொடங்கிட்டேன்…” இயக்குனர் லோகேஷ் கொடுத்த அப்டேட்!

ஞாயிறு, 31 ஜூலை 2022 (16:28 IST)
விஜய் அடுத்து நடிக்கும் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விக்ரம் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படத்தில் கதாநாயகி என்று யாரும் இல்லை என்றும் அதுபோலவே படத்தில் பாடல்களும் இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது ஒரு முக்கிய வேடத்தில் சமந்தா நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில் இப்போது லோகேஷ் கனகராஜ் பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது “விக்ரம் வெற்றிக் கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்து இப்போதுதான் ஒரு 10 நாட்களாக அடுத்த படத்துக்கான கதையை எழுத ஆரம்பித்துள்ளேன். படம் பற்றி அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் விரைவில் அறிவிக்கும். அதுவரை காத்திருங்கள். இன்னும் கொஞ்ச நாளில் அப்டேட் வரும்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்