இந்த நிலையில் இன்று லோகேஷ் கனகராஜ் தனது குழுவினருடன் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று மாஸ்டர் வெற்றிக்காக வழிபாடு செய்துள்ளார். இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படம் விஜய் விஜய்யின் பாணியில் 50 சதவீதமும் என்னுடைய பாணியில் 50 சதவீதமும் இருக்கும் என்றும் ஆனால் இந்த படம் வெற்றி பெற்று விட்டு மீண்டும் விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் 100% என்னுடைய பாணியில் அவரை வைத்து படம் எடுப்பேன் என்றும் கூறினார்