லிங்கா நஷ்டம் எவ்வளவு? ரஜினியிடம் அறிக்கை சமர்ப்பித்தனர்

சனி, 31 ஜனவரி 2015 (07:47 IST)
லிங்கா படத்தால் பல கோடிகள் நஷ்டம், எங்களுக்கு நஷ்டஈடு தரவேண்டும் என்று விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கினர். அந்தப் பிரச்சனை அiடாள உண்ணாவிரதம் இருக்கும் அளவுக்கு மோசமானது.
 

 

லிங்கா படத்தின் உண்மையான வால் எவ்வளவு, யார் யாருக்கு நஷ்டம் என்பதை ஆய்வு செய்ய கோவை விநியோகஸ்தரான சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டார். அவர் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்களிடம் பேசி வால் நிலவரத்தை ரஜினியிடமும், தயாரிப்பாளர் வெங்கடேஷிடமும் சமர்ப்பித்துள்ளார்.

நஷ்டக்கணக்கு எதிர்பார்த்ததைவிட அதிகம் இருப்பதால், தன்னால் மட்டும் சமாளிக்க முடியாது என்று, படத்தை மொத்தமாக வாங்கிய ஈராஸ் நிறுவனத்திடம் பேச வெங்கடேஷ் மும்பை சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லிங்காவை ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்தார். அதன் ஒட்டு மொத்த உரிமையை பெரும் தொகைக்கு ஈராஸுக்கு விற்றார். அவர்கள் லிங்காவின் தமிழக உரிமையை - கோவை நீங்கலாக - வேந்தர் மூவிஸுக்கும், கோவை உரிமையை லலிதா ஜுவலரிக்கும் லாபம் வைத்து விற்றனர். வேந்தர் மூவிஸ் தமிழகத்தின் சில ஏரியாக்களில் சொந்தமாக வெளியிட்டது. பல ஏரியாக்களை நல்ல லாபத்துக்கு விநியோகிஸ்தர்களுக்கு தந்தனர். அவர்கள் ஒரு லாபம் வைத்து திரையரங்குகளுக்கு கொடுத்தனர்.

லிங்காவில் லாபம் சம்பாதித்தவர்கள் அந்த லாபத்தில் சிறு பகுதியை தந்தாலே விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் நஷ்டத்திலிருந்து மீள முடியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்