பிரதீப் & விக்னேஷ் சிவனின் LIK படத்தின் ரிலீஸில் இப்படி ஒரு சிக்கலா?

vinoth

திங்கள், 28 அக்டோபர் 2024 (09:02 IST)
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ப்ரதீப் ரங்கநாதன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.  இதில் எஸ் ஜே சூர்யா, சீமான் மற்றும் க்ரீத்தி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றன. லலித்குமார் தயாரிக்கிறார் இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.

இந்த படத்தின் ஷூட்டிங் கோவை மற்றும் சிங்கப்பூரில் அடுத்தடுத்து நடந்தது. ஆனால் சில காரணங்களால் கடந்த சில மாதங்களாக ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் சண்டிகாரில் தொடங்கி நடந்தது. இந்த படத்துக்கு LIK (Life insurance company) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் “தீமா” வெளியாகி கவனம் பெற்றது.

இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. ஆனால் படத்தின் ரிலீஸில் ஒரு மிகப்பெரிய சிக்கல் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் இதுவரை இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமை இதுவரை விற்பனை ஆகவில்லையாம். அதனால் படத்தின் ரிலீஸ் எப்போது என்பது இதுவரை முடிவாகவில்லையாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்