விராட் கோலியின் பயாபிக்கை இயக்க விரும்பவில்லை.. இயக்குனர் அனுராக் காஷ்யப் தகவல்..!

Siva

புதன், 17 செப்டம்பர் 2025 (17:27 IST)
பிரபல பாலிவுட் இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப், கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை இயக்கப்போவதில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். கோலியின் பயோபிக்கை இயக்க போவதாக வெளியான செய்திகளை அவர் மறுத்துள்ளார்.
 
இதுகுறித்து பேட்டி அளித்த அனுராக் காஷ்யப், "நான் விராட் கோலியின் பயோபிக்கை இயக்க விரும்பவில்லை. ஏனென்றால், கோலி ஏற்கனவே பலருக்கும், குறிப்பாக குழந்தைகளுக்கும், ஒரு ஹீரோவாக இருக்கிறார். எனவே, அவரது வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்க வேண்டும் என்றால், வேறு ஒரு இயக்குநரை தேர்வு செய்ய வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
 
மேலும், "கோலி மிகவும் அழகான, அற்புதமான மனிதர். நானும் அவரது வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்றும் அவர் கூறினார்.
 
அனுராக் காஷ்யப் விலகியபோதும், விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை உருவாக்குவது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில், இந்த திரைப்படத்தை இயக்கப்போவது யார் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்