''கைதி படம் மாதிரி லியோ படம் இருக்கும்.''..இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தகவல்
புதன், 19 ஜூலை 2023 (20:45 IST)
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படம் பற்றி கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி லோகேஷ் கனகராஜ். இவர், மா நகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களுக்குப் பின் இயக்கியுள்ள படம் லியோ.
லோகேஷ் இயக்கி வரும் இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை செவன் ஸ்கீர்ன் ஸ்டுடியோ சார்பாக லலித் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.
சமீபத்தில், விஜய் குரலில், அனிருத் இசையமைப்பில், லியோ பட முதல் சிங்கில் நா ரெடிதான் என்ற பாடல் வெளியானது. இப்பாடல் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில், இப்படம் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், இன்று கோவை சரவணம்பட்டியில் நடைபெற்ற ஒரு கல்லூரி விழாவில் கலந்துகொண்ட லோகேஷ் கனக ராஜிடம் மாணவர்கள் கேள்வி எழுப்பினர். அதில்,ஒரு மாணவர், லியோ படத்தின் இரண்டாவது சிங்கில் எப்போது ரிலிஸ் ஆகும் என்று கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த லோகேஷ் கனகராஜ், கைதி மாதிரியான ஒரு படமான லியோ படமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
அதேபோல், இன்னொரு மாணவர், உங்களுக்கும் லவ் ஸ்டோரிக்கும் செட்டே ஆகாது…அதனால் லியோ படத்தில் திரிஷா மேடம் இருக்காங்க அவுங்களுக்கு ஒண்ணும் ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டனர். இதற்குச் சிரித்தபடியே, லோகேஷ் கனகராஜ், எனக்கு லவ் ஸ்டோரி செட் ஆகாதுன்னு நீங்களே ஏன் முடிவு பண்ணறீங்க என்று கூறி … சரி என்று கூறினார்.
மேலும், உங்கள் முதல் நாளில் நான் குத்து விளக்கு ஏற்றி வைத்துள்ளேன். ஒழுங்காக படிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.