திரிஷவுக்கும் லியோ 67 ஆவது படம்… மகிழ்ச்சியைப் பகிர்ந்த தயாரிப்பு நிறுவனம்!

வெள்ளி, 5 மே 2023 (07:47 IST)
விஜய் நடிக்கும் லியோ படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். படத்தின் படப்பிடிப்பு ஓரளவுக்கு முடிந்துவிட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ மற்றும் தி ரூட் இணைந்து தயாரிக்கும் இந்த படம் வருகின்ற அக்டோபர்-19ம் தேதியன்று உலகெங்கிலும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய்யுடன் சேர்ந்து த்ரிஷா நடிக்கும்  இசையமைக்கிறார். இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை திரிஷாவுக்கு லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் வாழ்த்து கூறியுள்ளது. அந்த பதிவில், “உங்களுடன் பணிபுரிவதில் ஒரு முழுமையான மகிழ்ச்சி. மகிழ்ச்சியும் கருணையும் பிரகாசிக்கும் மற்றொரு வருடத்திற்கு வாழ்த்துக்கள்! ” என வாழ்த்தியிருந்தனர்.

இந்நிலையில் லியோ படம் விஜய்க்கு மட்டும் 67 ஆவது படம் இல்லையாம். திரிஷாவுக்கும் 67 ஆவது படம்தான் என படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்