அதில், கோபாலபுரத்தில் ஓ.என்.வி இலக்கிய விருதினைக் கலைஞருக்குக் காணிக்கை செய்தேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னை வாழ்த்தி மகிழ்வித்தார். அவரது குரலும் அன்பும் இன்னும் அந்த இல்லத்தில் கலைஞர் வாழ்வதாகவே பிரமையூட்டின. தந்தை போல் தமிழ் மதிக்கும் தனயனுக்கு நன்றி சொல்லி மகிழ்ந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.