மொட்ட சிவா கெட்ட சிவா - இரண்டு படங்கள் ஒரு பெயர்

செவ்வாய், 10 நவம்பர் 2015 (11:36 IST)
வேந்தர் மூவிஸுக்காக லாரன்ஸ் இரண்டு படங்கள் இயக்கி நடித்துத்தர ஒப்புக் கொண்டிருந்தார். அதில் ஒரு படத்தின் பெயர், மொட்ட சிவா கெட்ட சிவா.


 

இப்போது இந்தப் பெயர் வேறெnரு படத்துக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர்குட் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திலும் லாரன்ஸ்தான் நாயகன். ஆனால், வேறு கதை.
 
அந்த கதை என்னவென்று பார்ப்போம்.
 
இந்த வருட ஆரம்பத்தில் தெலுங்கில் கல்யாண் ராம் நடிப்பில் வெளியான படம், பட்டாஸ். படம் வெற்றி. அந்தப் படத்தை ஆர்.பி.சௌத்ரி தமிழில் ரீமேக் செய்கிறார். சிங்கம் புலி படத்தை இயக்கிய சாய்ரமணி இந்த ரீமேக்கை இயக்க, லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். 
 
இந்தப் படத்துக்கு, மொட்ட சிவா கெட்ட சிவா டைட்டில் பொருத்தமாக இருக்கும் என இயக்குனரும், தயாரிப்பாளரும் கருத, வேந்தர் மூவிஸ் மதன், தாராளமாக எடுத்துக்கோங்க என்று தந்துவிட்டார்.
 
இந்தப் படத்தில் நாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். சத்யராஜ் முக்கியமான வேடம் ஒன்றை செய்கிறார். லாரன்ஸின் அடுத்தப் படமான இந்த மொட்ட சிவா கெட்ட சிவா இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்