ஆடியன்ஸை தியேட்டருக்கு இழுத்ததா லாபம் & தலைவி?

சனி, 11 செப்டம்பர் 2021 (15:25 IST)
கொரோனா இரண்டாம் அலை பொதுமுடக்கத்துக்குப் பின்னர் திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்னர் வெளியான இரண்டு பெரிய படங்களாக இவை உள்ளன.

கொரோனா முதல் அலையால் 8 மாதங்களுக்கு மேல் திரையரங்குகள் மூடப்பட்டன. பின்னர் திறக்கப்பட்ட போது பார்வையாளர்களை மறுபடியும் இழுக்கும் விதமாக மாஸ்டர் மற்றும் கர்ணன் ஆகிய படங்கள் ரிலிஸாகின. ஆனால் இரண்டாம் அலைக்குப் பின்னர் திரையரங்குகள் மூடப்பட்டு திறக்கப்பட்டுள்ள நிலையில் அதைப் போன்ற படங்கள் இன்னும் வெளியாகவில்லை.

அதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லாபம் மற்றும் தலைவி ஆகிய படங்களும் அதை செய்யவில்லை. லாபம் படத்தைப் பார்த்த பலரும் பிரச்சார வாடை அதிகமாக உள்ளதாக சொல்ல, தலைவி படமோ தனி நபர் துதிபாடும் படமாக உருவாகியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. மொத்தத்தில் இரண்டு படங்களுமே சினிமா ரசிகர்களை திரையரங்குகளுக்குள் பெருவாரியாக இழுக்க தவறியுள்ளன என்பதே கசப்பான உண்மை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்