நடிகை குஷ்புவின் சகோதரர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட நடிகை குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் தனது சகோதரர் உயிருக்காக போராடி வருகிறார் என்றும் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் தெரிவித்திருந்தார்.