‘பாகுபலி’யைப் பார்த்து, அதேபோல் ஒரு படத்தை இயக்க ஆசைப்பட்டார் சுந்தர்.சி. ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க முன்வர, ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதி ஹாசன் நடிப்பில் ‘சங்கமித்ரா’ படம் தொடங்குவதாக இருந்தது. ஆனால், ஸ்ருதி படத்தில் இருந்து நீக்கப்பட, இன்னமும் ஹீரோயின் கிடைக்காமல் அலைந்து வருகிறது படக்குழு. இந்நிலையில், ‘சங்கமித்ரா’ படம் குறித்து விமர்சிப்பவர்களைச் சாடி, ட்விட்டரில் தொடர்ச்சியாகப் பதிவிட்டுள்ளார் குஷ்பூ.
“இந்தியாவிலேயே மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகும் படம் ‘சங்கமித்ரா’. அப்படிப்பட்ட படத்தை, சரியாகத் திட்டமிடாமல் தொடங்க முடியாது. இந்தப் படத்தின் கதை கூட இன்னும் தயாராகவில்லை என்று ஒருவர் கமெண்ட் செய்திருந்தார். கடந்த 2 வருடங்களாக அதற்கான வேலைகள் தான் நடைபெற்று வந்தன. ‘சங்கமித்ரா’வைப் பொறுத்தவரை, ஷூட்டிங் என்பது 30 சதவீதம் தான். மீதமுள்ள 70 சதவீதம் ஷூட்டிங்கிற்கு முன்பான வேலைகள்தான்” எனப் பொரிந்துள்ளார் குஷ்பூ. ஆமா… ஷூட்டிங் முடிந்தபிறகு பண்ண வேண்டிய போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை எந்தக் கணக்கில் சேர்ப்பது மேடம்?