இயக்குனர் ராம் தலைமையில் கூழாங்கல் பட இயக்குனருக்கு ஜாதி மறுப்பு திருமணம்!

சனி, 21 ஆகஸ்ட் 2021 (11:19 IST)
கூழாங்கல் படத்தின் இயக்குனர் வினோத்துக்கு இயக்குனர் ராம் திருமணம் நடத்தி வைத்துள்ளார்.

இயக்குனர் வினோத்ராஜ் இயக்கத்தில் உருவான கூழாங்கல் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது ரௌடி பிக்சர்ஸ்க்காக வாங்கி வெளியிடுகிறார். இந்த படம் முதலில் சர்வதேச திரைப்பட விழாக்களில் எல்லாம் ரிலீஸாகிக் கொண்டு இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர்ப் ரோட்டர்டாம் விழாவில் புலி விருதுக்கான போட்டி பட்டியலில் கலந்துகொண்டு விருதினைப் பெற்றது. இன்னும் பல சர்வதேச விருதுகளில் கலந்துகொண்டு வரும் நிலையில் இப்போது இயக்குனர் வினோத் ராஜ் தன்னுடைய காதலியை திருமணம் செய்துள்ளார்.

மணப்பெண் அறிவுநிலாவின் வீட்டில் இந்த திருமணத்துக்கு சம்மதம் இல்லை என்பதால் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் எளிமையாக நடந்துள்ளது. இந்த திருமணத்தை இயக்குனர் ராம் தலைமையேற்று நடத்தி வைத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்