6 கோடிக்கு ரூபாய்க்கு விலைபோன ‘கோலிசோடா 2’

வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (17:26 IST)
விஜய் மில்டன் இயக்கிய ‘கோலிசோடா 2’ படம், 6 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

 
விஜய் மில்டன் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘கோலிசோடா’. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘கோலிசோடா 2’ படத்தை இயக்கியுள்ளார் விஜய் மில்டன். புதியவர்கள் நடித்துள்ள இந்தப் படத்தில், சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இயக்குநர் கெளதம் மேனன் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.
 
இந்தப் படத்தை, 6 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது டிரைடன்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனம். சந்தானம் நடித்த ‘சக்க போடு போடு ராஜா’ மற்றும் சித்தார்த் நடித்த ‘அவள்’ ஆகிய படங்களையும் இந்த நிறுவனம்தான் ரிலீஸ் செய்தது. அதுமட்டுமல்ல, மாதவன் - விஜய் சேதுபதி நடித்த ‘விக்ரம் வேதா’ படத்தையும் இந்த நிறுவனம் தான் ரிலீஸ் செய்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்