ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. நால்வரும் ஊழல்வாதிகள், குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிபதிகள், சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவருக்கும் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 10 கோடி அபராதமும் விதித்தனர்.
இந்த தீர்ப்பு குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த குஷ்பு, தமிழ்நாட்டின் குடிமகளாக நான் ஆறுதல் அடைந்துள்ளேன். எனது மாநிலம் பாதுகாப்பாக இருக்கிறது என்ற மகிழ்ச்சியில் இருக்கிறேன். நம்மை சூழக் காத்திருந்த இருண்ட பேரிடர் ஒன்று முடிந்திருக்கிறது. மறைந்த முதல்வர் அம்மா மனம் சாந்தியடையும். தமிழக மக்களுக்கு சிறந்த காதலர் தின பரிசை உச்ச நீதிமன்றம் தந்துள்ளது. மக்கள் நிம்மதிப் பெருமூச்சுடன் அச்சமின்றி வாழலாம் என்று கூறியுள்ளார்.