ராக்கி பாய் வந்துட்டான்: KGF 2 தீம் மியூசிக் ப்ரொமோ வீடியோ!
புதன், 20 நவம்பர் 2019 (16:34 IST)
கே.ஜி.எஃப் 2 திரைப்படத்தின் முக்கிய தீம் மியூசிக்கிற்கான ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
எப்போது வரும் என்று இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2ன் புதிய அப்டேட் ஒன்றை அதன் இசையமைப்பாளர் வெளியிட்டுள்ளார்.
யஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப் சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
இந்தியா முழுவது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தி கன்க்ளூஷன்’ என பதிவுட்டு கே.ஜி.எஃப் 2 தீம் மியூசிக்கின் ப்ரொமோவை பகிர்ந்துள்ளார்.